ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா பகுதியைச் சேர்ந்தவர் மோகன்,இவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் அப்போது பத்து வயதே ஆன தன் மகன் நேமனி ப்ரணவ் என்பவருடன் கொத்தபள்ளி பகுதியில் இருக்கும் பீச்சுக்குப் பொனார்.
அந்த கடற்கரையில் ஜின் ஜாலபேட சத்தையா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்தார்,இதைப் பார்த்ததும் அப்போது சிறுவனாக இருந்த நேமனி ப்ரணவ் தன் அப்பாவிடம் வேர்க்கடலை வாங்கிக் கேட்டார். மோகனும், உடனே வேர்க்கடலை வாங்கிக் கொடுத்துவிட்டு, பர்ஸை எடுத்துப் பார்த்தார்.
அப்போதுதான் அவர் பின் பாக்கெட்டில் பர்ஸ் இல்லாததையும், தான் மறந்து வீட்டில் பர்ஸை வைத்துவிட்டு வந்ததையும் உணர்ந்தார் இதை தயங்கியபடியே மோகன் சித்தைய்யாவிடம் சொல்ல, அவரோ இருக்கட்டும் சாமி.
நாளைக்கு வரும்போது கொடுங்க என பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார்,இதை மோகன் மறந்துவிட்டார். தொடர்ந்து அவரது குடும்பமும் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டது. வேர்க்கடலை சாப்பிட்ட காசை கொடுக்க முடியவில்லையே என சிறுவன் நேமனி ப்ரணவின் மனம் வாடிக்கொண்டே இருந்தது,நேமணி திரும்பி வந்து சித்தய்யாவைத் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
உடனே அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவிடம் போய் விபரத்தைச் சொல்லி உதவி கேட்டார்,நீண்ட தேடலுக்குப் பின்பு தான் சித்தையா இரு வருசத்துக்கு முன்பே இறந்து விட்டார் எனத் தெரியவந்தது.
உடனே ப்ரணவ் தான் கொடுக்க வேண்டிய பத்து ரூபாய் பாக்கிக்காக சித்தைய்யாவின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்,இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.